மலேரியா இல்லாத தேசம்: எந்த நாடு தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து சான்று அளித்துள்ளது உலக சுகாதார மையம். மலேரியா நோயை அழிக்க சுமார் நூறாண்டு கால முயற்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மலேரியா இல்லாத தேசமாக எகிப்துக்கு வழங்கியுள்ள இந்த சான்றானது அந்நாட்டு மக்கள் மற்றும் அரசின் அர்ப்பணிப்புக்கு கிடைத்துள்ள சான்றாகும். இதிலிருந்து விடுவித்துக் கொள்ள அயராத உழைப்பு அடங்கியள்ளது என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

எகிப்துடன் சேர்த்து உலக அளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக தற்போது உள்ளன. அனோபிலிஸ் கொசுக்களால் பரவும் மலேரியா பாதிப்பு சுமார் மூன்று ஆண்டு காலம் தடுக்கப்பட்டதை ஒரு தேசம் நிரூபிக்கின்ற போது உலக சுகாதார மையம் மலேரியா இல்லாத தேசம் என்ற சான்றினை வழங்குகிறது.

Related Posts