Font size:
Print
இந்தியாவில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் செல்வதை விரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ரயில்களில் குறிப்பிட்ட சிலருக்கு 75% வரை கட்டண சலுகையானது வழங்கப்படுகிறது. அதாவது கண் பார்வை தெரியாத மாற்று திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பொது பெட்டிகள், 3 ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச் போன்றவைகளில் 75% வரை கட்டண சலுகையானது வழங்கப்படுகிறது. இதனையடுத்து முதல் தர மற்றும் இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதே போன்று கல்வி மற்றும் சுற்றுலா போன்றவைகளுக்காக செல்லும் மாணவர்களுக்கும் 50% முதலில் 75% வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
Related Posts