குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் தனது மனைவி பிர*சவத்தின் போது ஆப*ரேஷன் தியேட்டரில் எடுத்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெ*ட்டி இருந்தது ச*ர்ச்சை ஆனது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி இருந்தார். தற்போது அந்த மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இர்ஃபான் ரோட்டில் சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது கார்விட்டு ஏற்றினார் என்ற ஒரு சர்ச்சையும் இருந்தது இறுதியாக அவரது ட்ரைவர் மீது அந்த பழியை சுமத்தினார்கள் என்றும் கூறப்பட்டது. அதுவும் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இப்போது தொப்புள் கொடியை கத்தரித்து பெரிய சிக்கலில் மீண்டும் மாட்டிக்கொண்டார்.
இர்பான் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.இந்த விவகாரம் பற்றி மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி என்பவர் வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினி பி*ரசவத்தின்போது ஆ*பரேஷன் தியேட்டர் உள்ளே இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த சின்ன ஹேன்டி கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார்.பெண்கள் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால் தான் புரியும் என அஜித் அதை செய்ததாக அப்போது அவரை எல்லோரும் பாராட்டினார்கள்.இருப்பினும் இர்பான் கொஞ்சம் எல்லைமீறி போய் உள்ளே சென்று குழந்தை தொப்புள் கொடியை வெ*ட்டி இருக்கிறார். அது மிகப்பெரிய தவறு என மருத்துவர் கூறி இருக்கிறார். நெட்டிசன்களோ அந்த காலத்தில் வீட்டிலே பி*ரசவம் பார்த்தவர்கள் அரிவாளால் தொப்புள் கொடியை வெட்டினார்களே இப்போது ஏன் இதை பெரிதாக்க வேண்டும் என அலறுகிறார்கள். இதுப்பற்றி உங்களது கருத்து என்ன?
கையடக்க தொலைபேசியில் அறிவிக்க வேண்டாம் | Thedipaar News