ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கடும் பதற்றம் உருவாகியுள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐடிஎப்) தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள உள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரானில் உள்ள ஆட்சியும், பிராந்தியத்தில் அதன் ஆதாரவாளர்களும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஈரான் ராணுவத்திற்கு அந்நாட்டின் உயர் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால், அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் கடும் போர் பதற்றம் உருவாகியுள்ளது. (P)
தேய்ந்துபோன கட்டைகளை வேட்பாளர்களாக போட்டிருக்கிறார்கள்! | Thedipaar News