ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழை தர மறுக்கும் கனடா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறார். சுமார் ஓராண்டுக்கும் மேலாக மவுனமாக இருந்த அவர் தற்போது மீண்டும் அதே குற்றச்சாட்டை தீவிரமாக எழுப்பி வருகிறார்.

மேலும், நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சஞ்சய் குமார் வர்மா உட்பட 6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றி வந்த 6 கனடா தூதரக அதிகாரிகளை இந்திய அரசு வெளியேற்றியது.

இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கனடா அரசிடம் இந்திய என்ஐஏ அதிகாரிகள் கேட்டிருந்தனர். ஆனால் அந்தச் சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை கனடா அரசு தர மறுத்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

அனுர அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ; நாமல் | Thedipaar News

Related Posts