விஜய் கட்சிக் கொள்கை எங்களது கொள்கைக்கு நேரெதிரானது: சீமான்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் கட்சிக் கொள்கை எங்களது கட்சிக் கொள்கைக்கு நேரெதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்று அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. 

திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது. இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். 

எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்.” என்றார்.

12 வர்த்தக நிலையங்களுக்கு வழக்கு தாக்கல் | Thedipaar News

Related Posts