காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட தொடர்பான விசாரணை ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கிரிதல இராணுவ முகாமின் முன்னாள் தளபதி ஷம்மி குமாரரத்ன மற்றும் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று முன்தினம் (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பமானது.

உயர் நீதிமன்ற நீதிபதி கலாநிதி நாமல் பலாலே தலைமையிலான நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், இரண்டு பிரதான தொலைபேசி நிறுவனங்களின் அதிகாரிகள் இருவர், கடத்தலின் போது குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து சாட்சியமளித்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோர், பாதுகாப்பு தரப்பில்  முன்னிலையான சட்டத்தரணிகளாவர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாக ஏற்றுக்கொண்ட போதிலும், தொலைபேசி கோபுரங்கள் தொடர்பான முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட வரைபடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதாக ஏற்றுக்கொண்ட போதிலும், தொலைபேசி கோபுரங்கள் தொடர்பான முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட வரைபடங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உதார கருணாதிலக்க தலைமையில் தொலைபேசி நிறுவன அதிகாரிகள் சாட்சியமளித்ததையடுத்து மேலதிக சாட்சிய விசாரணை டிசம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (P)

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் | Thedipaar News

Related Posts