புதிய கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் முன்னிலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க அதிபர் தேர்தல் இம்மாதம் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிதாக வெளியான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பின்னடைவு கண்டுள்ளார்.

கடந்த ஜூலை இறுதியில் வெளியான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகமாக இருந்தது. ட்ரம்பைவிட அவருக்கு கூடுதலாக 3 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு அவருக்கான ஆதரவு சற்று குறையத் தொடங்கியது. கடந்த அக்டோபரில் வெளியான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 44 சதவீதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு 43 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். 

இருவருக்குமான இடைவெளி ஒரு சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பர் 1-ம் தேதி 'குக் பொலிடிக்கல் ரிப்போர்ட்' வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 48.6%, ட்ரம்புக்கு 47.7% ஆதரவு கிடைத்தது. நவம்பர் 2-ம் தேதி 'தி ஹில்' நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், கமலாவுக்கு 48.1%, ட்ரம்புக்கு 48.3% வாக்குகள் கிடைத்தன. 

இந்நிலையில், நேற்று (நவ.2) 538 என்ற அமை்பபு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கமலாவுக்கு 47.9%, ட்ரம்புக்கு 46.9% வாக்குகள் கிடைத்தன. இவை உட்பட புதிதாக வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Related Posts