தமிழில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு நடிகை என்றால் அது இவர்தான். ஹீரோயின் என்றாலே இந்திய பெண்கள் தான் என்ற நிலையை மாற்றி வெளிநாட்டு நடிகை தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்தது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. தாண்டவம், தெறி, ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்ஷன் நாயகியாக மிரட்டியிருந்தார்.நடிகை எமி ஜாக்சனுக்கு திருமணத்திற்கு முன்பே ஆண் குழந்தை பிறந்தது.
2015ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை காதலித்து அவருடைய லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார் எமி ஜாக்சன்.குழந்தை பிறந்த பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் கடந்த இரண்டு ஆண்டுகளாக Ed Westwick என்கிற ஹாலிவுட் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக நடிகை எமி ஜாக்சன் அறிவித்துள்ளார். தனது கணவர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ள நடிகை எமி ஜான்சனுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.