சினிமாவில் காலடி வைக்க தயாரான தேவயானி மகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை தேவயானி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். சரத்குமார், கார்த்திக், சத்யராஜ், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் அவர் நடித்து இருக்கிறார்.அவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டபிறகு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். பின்னர் கோலங்கள் சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சின்னத்திரையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார். இவரது புகழ் மேலும் உச்சத்திற்கு சென்றது. மீண்டும் தனது ரசிகர்கள் மத்தியில் விட்ட இடத்தை பிடித்தார். 90 களின் நடிகை திருமணத்திற்கு பிறகும் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து வெற்றி கொடியை நாட்டினார் என்றால் அது இவர் மட்டும் தான். 

தற்போது டிவி தொடர்கள், படங்கள் என மீண்டும் நடித்து வருகிறார் தேவயானி.தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தனது மகள் தாவணியில் இருக்கும் போட்டோவை தேவயானி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவரது இந்த மகளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் இன்னொரு மகளுக்கு படங்கள் இயக்க ஆசை இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts