உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தாய்லாந்தில் கா கியோவ் உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.
அந்த நீர்யானையின் முன் பூங்கா பராமரிப்பாளர்கள் இரண்டு தர்பூசணிப் பழங்களை வைத்தனர். ஒன்றில் ட்ரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் பொரிக்கப்பட்டிருந்தது.
அந்த குட்டி நீர்யானை நேராக ட்ரம்ப் பெயர் பொரித்திருந்த தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் மூ டெங், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததாகக் கூறப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.