பிராம்ப்டன் பகுதியில் ஹிந்து சபை கோயில் உள்ளது. இங்கு இந்திய தூதரகம் சார்பில் அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இங்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
ஹிந்துக்கள் ஒவ்வொருவரையும் குறி வைத்து ஓட ஓட விரட்டி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து பிராம்ப்டன் பகுதி ஹிந்துக்கள், கோயில் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, போராட்டம் நடக்கும் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஆயுதங்கள் காணப்பட்டன.
இந்த பகுதிக்கு பொது மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு சட்டவிரோதமாக கூடி உள்ளனர். அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். அல்லது கைது செய்யப்படுவீர்கள் என கூறியுள்ளனர்.