அமெரிக்க தேர்தல் - தற்போதைய நிலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

இதுவரை டிரம்ப் 162 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியுள்ள அவர் இதுவரையிலும் 81 தேர்வாளர் குழு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts