அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று 47வது அதிபராகும் டொனால்ட் டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்தி உள்ளார்.
நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.
நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன.
அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.
அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்தது உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.