அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆகவுள்ளார். இவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உதவிய குழுவில் அரசியல் பிரபலம் துளசி கப்பார்ட், தொழிலதிபர்கள் விவேக் ராமசாமி,எலான் மஸ்க், ராபர்ட் எப். கென்னடி ஜூனியர், ஜே.டி.வான்ஸ் எனபலர் இடம் பிடித்தனர். அவர்களில் முக்கியமானவர் துளசி கப்பார்ட்.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாகதேர்வு செய்யப்பட்டவர் துளசி கப்பார்ட். அமெரிக்காவின் முதல்இந்து எம்.பி.
இவர் கடந்த 2002-ம் ஆண்டில் தனது 21-ம் வயதிலேயே அமெரிக்காவின் ஹவாய் மாகாண தேர்தலில்ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2003-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந் தார். கடந்த 2004-ம் ஆண்டு இராக் அனுப்பப்பட்டார். அங்கு ஒராண்டு ராணுவப் பணியை முடித்துவிட்டு திரும்பினார்.
அதன்பின்பு ராணுவ அதிகாரியாக லெப்டினன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் ஜனநாயக கட்சி சார்பில் ஹவாய்மாகாணத்தில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். இவர் ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டார். பின்னர் அதிபர் வேட்பாளர் போட்டியில்இருந்து விலகி, ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்தார். இவர் கடந்த2022-ம் ஆண்டு ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார்.
இந்தாண்டு தொடக்கத்தில் இவர் குடியரசு கட்சியில் சேர்ந்தார். மிச்சிகன் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அமெரிக்க நேசனல் கார்ட் கருத்தரங்கில், அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவதை ஆதரித்து பேசினார். இது ட்ரம்பை மிகவும் கவர்ந்தது. ஜனநாயக கட்சியில் இருந்தபோது துளசி கப்பார்டின் கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் ட்ரம்பை கவர்ந்தன.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு எதிராக பேச துளசி கப்பார்ட்டின் பங்களிப்பை ட்ரம்ப் நன்கு பயன்படுத்தினார்.
பொதுக் கூட்டங்கள் மற்றும் விவாதங்களில் ஜனநாயக கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டுசேர்த்தார். இதன் மூலம் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு துளசி கப்பார்ட்உதவியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் துளசிக்கு முக்கிய பதவி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.