புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லசி என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் சிறை வளாகத்தில் இருந்து, அலைபேசி மற்றும் பல உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
பொடி லசி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவின் செல் எண் 42-ஐ அவசரமாக ஆய்வு செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்குச் சென்றுள்ளது.
இதன்போது, பொடி லசி தனது உடமையில் வைத்திருந்த அலைபேசி மற்றும் துணைக்கருவிகளை பின்புற ஜன்னல் வழியாக வீசியதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அதன்படி, அலைபேசி 1, சார்ஜர் 1, டேட்டா கேபிள், 01 ஹேண்ட் ஃப்ரீ உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர். (P)