இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்றது. இதில் உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், யோகா மையங்கள், நாடக அரங்குகளில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்என ஷாம்லி மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதேபோல் பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பாளர் அல்லது ஆசிரியரை நியமிக்க வேண்டும். பெண்களுக்கான தையல் கடைகளில் பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரரை நியமிக்க வேண்டும். ஆண் தையல்காரர்கள் அளவெடுக்க கூடாது. அங்கு கண்காணிப்பு பணிக்கு சிசிடிவி கேமராபொருத்த வேண்டும்.
கேமரா கண்காணிப்பு: அதேபோல் பயிற்சி மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. பெண்களுக்கான ஜவுளிக்கடையில் உதவியாளர்களாக பெண்களை நியமிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.