பிரதமர் ட்ரூடோ தோல்வி அடைவார்: எலான் மஸ்க் கணிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அடுத்து நடைபெறவுள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்" என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார். எஸ்க்கின் கூற்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக அவர் தேர்வாகி இருக்கிறார். 

இந்தத் தேர்தலில் ட்ரம்ப் பிரச்சாரத்துக்கு எலான் மஸ்க் பெரியளவில் உதவினார். குறிப்பாகக் களத்தில் இறங்கியும் பிரச்சாரம் செய்தார். ட்ரம்ப்பின் வெற்றிக்கு எலான் மஸ்க்கும் முக்கிய காரணம் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Related Posts