கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பல்வேறு கட்டணங்களை தன்னிச்சையாக அறவிடுவதால் பச்சை நிற ஆடை அணிந்த குழுவொன்று மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.
இவ்வாறு பணம் வசூலிப்பது மிகவும் அநியாயம் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகக்குறைந்த நேரத்திற்கே வந்து ஓய்வெடுக்க வருபவர்களிடம் இவர்கள் பணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நாட்டு மக்களிடம் பணம் வசூலிப்பதில் நியாயமான முறைமை பின்பற்றப்பட வேண்டுமென மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில், கொழும்பு மாநகர சபையின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அது தொடர்பில் ஆராய்வதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட குழுக்கள் பணம் வசூலிப்பதாகக் கூறும் வாகன உரிமையாளர்கள், தமது அன்றாட நடவடிக்கைகளுக்காக வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல், நகரில் இலவச வாகன தரிப்பிடங்களை ஒதுக்குவது மிகவும் அவசியம் என அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றனர். (P)