கேரளாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய கடல் விமானம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சேவையை துவக்க இருக்கிறது. அதன்படி கொச்சி - மூணாறு மாட்டுப்பட்டி அணை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. விமானமானது மூணாறு மாட்டுப்பட்டி அணையில் தரையிரங்கியது.

சாலையில் பயணம் செய்தால் குறைந்தது 5 மணிநேரம் ஆகும். ஆனால் இந்த விமானம் அரை மணி நேரத்தில் வந்தடைந்தது. மூணாறு மாட்டுப்பட்டி அணைக்கு வந்த விமானத்திற்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சோதனை ஓட்டம் முடிந்து அனைத்தும் சரியாக நடந்தால், இன்னும் ஆறு மாதங்களுக்குள் சுற்றுலா பயணிகளுக்கான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவைப் போல இந்த சேவையை கொச்சி, வயநாடு, ஆலப்புழா மற்றும் பல இடங்களில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடல் விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு மீட்டர் ஆழமும், புறப்படுவதற்கு சுமார் 800 மீட்டர் நீர் ஓடுபாதையும் மட்டுமே தேவையாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts