சோதனைக் கூடத்திலிருந்து தப்பிய குரங்குகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆல்பா ஜெனிசிஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்த 43 குரங்குகள் தப்பித்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

தெற்கு கரோலினாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ரீசஸ் மக்காக் விலங்கினங்கள் இருக்க கூடிய ஆல்பா ஜெனிசிஸ் நிறுவனத்தின் உள்ள 43 குரங்குகள் வெளியேறின. ஒரு புதிய ஊழியர் குரங்குகளுக்கு உணவளிக்க சென்றபோது சரியாக கதவுகளை சரியாக பூட்டாமல் சென்றுள்ளதால், குரங்குகள் தப்பிச் சென்றுள்ளன.

அதில் தப்பி ஓடிய குரங்குகள் எந்த வகை நோயினாலும் பாதிக்கப்படாததால் மக்களுக்கு எதும் பாதிப்பு வராது. மேலும் வெளியேறிய அனைத்தும் பெண் குரங்குகள் மற்றும் குட்டி குரங்குகள் அவை இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாதவை. பெரிய பெண் குரங்குகள் சுமார் 3 கிலோ எடை கொண்டவையாகும் என ஆய்வாளர்கள் கூறினர். 

அந்த பகுதியில் வசிப்பவர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பாதுகாப்பு கருதி மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாரும் குரங்குகளை விளையாட்டாகக் கூட வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருவேளை குரங்குகளைப் பார்த்தால் அவசர உதவி எண்ணுக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Posts