கிராண்ட்பாஸ் முதுர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மின்தூக்கி (லிஃப்ட்) சரிந்து விழுந்ததில் கிராண்ட்பாஸ் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் காவல்துறையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் மின்தூக்கி சரிந்து விழுந்ததில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸாரின் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், இந்த வீட்டுத் தொகுதியின் 5வது மாடியில் உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை (10) பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளனர்.
அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு விரைந்துசென்ற பொலிஸார், நிலைமையை விளங்கப்படுத்திவிட்டு, மீண்டும் திரும்பியபோதே, நான்காவது மாடியில் வைத்து, மின்தூக்கி விழுந்துள்ளதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. (P)