பாலஸ்தீன மக்களை சித்ரவதை செய்த ஹமாஸ் தீவிரவாதிகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாலஸ்தீன மக்களை ஹமாஸ் தீவிரவாதக் குழுவினர் சங்கிலியால் கட்டிவைத்து சித்ரவதை செய்யும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன மக்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ 2018 முதல் 2020-ம்ஆண்டுக்குள் வடக்கு காசா பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கண்காணிப்புக் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் இவை என்று தெரிவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான தகவலை நியூயார்க் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் முன்பு தங்கியிருந்த ஜபாலியா என்ற பகுதியில் உள்ள முகாமில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மீறி பிடித்து வைத்த பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் சித்ரவதை செய்யும், அவர்கள் மிருகத்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை வீடியோவில் பதிவாகியுள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

 47 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் முகாமின் கூரைப்பகுதியில் இருந்து சங்கிலியால் பொதுமக்கள் கை, கால்கள் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றனர். மேலும் ஹமாஸ் அமைப்பினர் தங்களது முகங்களை ்முகமூடியால் மூடிக்கொண்டு அவர்களிடம் கேள்வி எழுப்புவதும்,அடித்து துன்புறுத்துவதும்வீடியோவில் பதிவாகியுள்ளது.

Related Posts