ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்று வரும் புஷ்கர் விழாவின் ஹீரோவாக வலம் வருகிறது அன்மோல் என்கிற எருமை மாடு. 23 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டும், அதை விற்காமல் இருக்கிறார் அதன் உரிமையாளர்.
ஆறு அடி அங்குலம், 13 அடி நீளம், 1500 கிலோ எடை என இந்த எருமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. முரா இனத்தை சேர்ந்த இந்த எருமையின் உரிமையாளர் பெயர், ஜக்தர் சிங். தற்போது 8 வயதாகும் அன்மோலுக்கு ஒரு நாள் தீனி செலவு 2000 ரூபாய் ஆகிறதாம்.
முந்திரிப் பருப்பு, பாதாம், வாழைப்பழம், சோயா, சோளம் என போஷாக்கான உணவே எருமைக்கு உணவாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய அன்மோலை புஷ்கர் சந்தைக்கு கூட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜக்தர் சிங்.
23 கோடி ரூபாய் வரை இந்த எருமைக்கு விலை பேசிவிட்டார்கள். ஆனால், ஜக்தர் சிங், அன்மோலை தன்னுடைய மகனாக பாவித்து வருவதால், அதை விற்பதற்கு மனமில்லை என அறிவித்துவிட்டாராம்.