வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது.

அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வடமாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (P)


Related Posts