கட்டாயம் இவற்றை எடுத்துச் செல்லுங்கள்...

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும்.

நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டை கிடைக்காமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்துச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் 
* அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
* வயோதிப அடையாள அட்டை
* மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை
* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
*மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
*ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை 

(P)

Related Posts