கனடா, அயோத்தி கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவோம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் இதர இந்து கோயில்கள் மீது வரும் 16, 17 தேதிகளில் தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.

அயோத்தியில் வன்முறை வெடிக்கும். இந்துத்துவா சித்தாந்தத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்வோம். வன்முறை இந்துத்துவா சித்தாந்தத்தின் பிறப்பிடமான அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் அடித்தளத்தை தகர்ப்போம்.

கனடாவின் மிசிசவுகாவில் உள்ள காளிபரி கோயிலில் 16-ம் தேதியும் பிராம்ப்டனின் திரிவேனி கோயிலில் 17-ம் தேதியும் நடைபெறவுள்ள வாழ்நாள் சான்றிதழ் முகாமில் இந்திய தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவோம். எனவே, கனடாவாழ் இந்தியர்கள் இந்த முகாமில் பங்கேற்க வேண்டாம்.

 கனடாவில் உள்ள பல இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். கனடா எம்.பி. சந்திர ஆர்யா இந்து தீவிரவாதத்தின் முகமாக விளங்குகிறார். அவர் கனடாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அல்லது அங்கிருந்து அவர் உடனடியாக வெளியேற வேண்டும் என குர்பத்வந்த் சிங் பன்னுன் கூறியுள்ளார். 

Related Posts