வாக்களிப்பு நிறைவு: வாக்கெண்ணுதல் ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், இன்று வியாழக்கிழமை (14)  காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்களிப்பு நிலையங்கள் யாவும் மூடப்பட்டு, வாக்கெண்ணும் நிலையங்கள் திறக்கப்பட்டன. வாக்கெண்ணும் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, மாலை 4.30க்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக  8352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு  17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். (P)


Related Posts