மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு: 5,000 துணை ராணுவ வீரர்கள் விரைவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத் தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன் முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத் தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ் வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் மக்களை வன்முறையில் இருந்து பாதுகாத்து, அமைதியை நிலை நாட்டும் வகையில் கூடுதலாக 5,000 வீரர் கள்அடங்கியதுணைராணுவப்படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச் சகம் முடிவு செய்துள்ளது.

பதற்றமான சூழல் நிலவுவதால், மாநிலத்தில் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவி அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பல மாவட் டங் களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஒரு கும்பல் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதவுபா (20) என்ற போராட்டக்காரர் உயிரிழந்தார். "அவரை சுட்டது யார் என்பது இது வரை தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், கண்ணால் கண்ட சாட்சியின் வாக்குமூலம் அடிப்படையில் இளைஞ ரின் உடம்பில் பாய்ந்த குண்டு, பாது காப்பு படையினரிடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Posts