நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் சினிமாவில் நடித்த காலத்தில் இவருக்கு நிகர் இவர் மட்டும் தான். அந்த அளவிற்கு தனக்கு போட்டியாக எத்தனை ஹீரோயின் வந்தாலும் தனது திறமையால் தனித்து நின்றவர். சினிமாவை தாண்டி நிறைய விஷயங்கள் மூலம் டிரண்ட் செட்டராக இருந்துள்ளார். குஷ்பு இட்லி தொடங்கி நிறைய விஷயங்கள் அவரது பெயரில் பேமஸ் ஆனது. முக்கியமாக இவரது ரசிகர்கள் இவருக்கு கோவிலே கட்டினார்கள். ஒரு நடிகையை ரசிகர்களால் இவ்வளவு அதிகமாக கொண்டாட முடியுமா என மற்ற மொழி சினிமாக்கள் குஷ்பூவிற்கும் ரசிகர்களுக்கும் உள்ள அன்பை வியந்து பார்த்தார்கள். சினிமா, அரசியல் என இரண்டிலும் கெத்தாக வலம் வரும் குஷ்பு தனது இன்ஸ்டாவில் சமீபகாலமாக நிறைய சமையல் வீடியோக்களை வெளியிடுகிறார் மற்றும் டிப்ஸ் கூறுகிறார்.
குறிப்பாக சில காலமாக குண்டாக இருந்த குஷ்பூ உடல் எடை குறைத்து ஆளே மாறியுள்ளார். இப்போது கூட ஹீரோயினாக நடிக்க போகலாம் என ரசிகர்கள் இவருக்கு புகழாரம் பாடி வருகிறார்கள். இவர் சமீபத்தில் தனது சோசியல் மீடியாவில், கேரட் துருவலோடு, தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்கவைத்த எண்ணெய் செய்முறையை பகிர்ந்திருந்தார். அது ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதாகவும் சரும நிறத்தை அதிகரிப்பதாகவும் சொல்லியிருந்தார். அவரின் இந்த ஸ்கின் கேர் டிப்ஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.