தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் சில படங்கள் நடித்துவர பின் படிப்பிற்காக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். படிப்பை முடித்தவர் மீண்டும் சினிமா பக்கம் வந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்து வருகிறார். பறக்க பொசுபொசுவென இருந்த கீர்த்தி இடையே உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். முக்கியமான தகவல் என்னவென்றால் உடல் எடையை குறைத்த பின்னர் இவருக்கு அழகும் ரசிகர்களின் ஆதரவும் குறைந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
ஏனெனில் சோசியல் மீடியாவில் ரசிகர்கள், உங்களுக்கு வெய்ட் லாஸ் செட் ஆகவில்லை கீர்த்தி என கூறி இருந்தார்கள். எல்லா விமர்சனத்தையும் தாண்டி இப்போது மீண்டும் ஆக்டிவாக விட்ட இடத்தை பிடித்து விட்டார்.
32 வயதாகும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொச்சியில் இருந்து துபாய் சென்று செட்டில் ஆகியுள்ள ஆண்டனி தட்டில் என்பவருடன் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளாராம். கீர்த்தி சுரேஷ் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே அவர்கள் காதலித்து வருகிறார்களாம்.15 வருட காதலுக்கு பிறகு அவர்கள் தற்போது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டனி சென்னையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.