இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவிலும் பாப்புலர் ஆன இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் விருது மூலம் தமிழனை உலகம் எல்லாம் உள்ள பட்டி தொட்டி எல்லாம் அறிமுகம் செய்தவர். எந்த காலத்தவருக்கும் பிடிக்கும் வகையில் இவரது இசை இருக்கும். இன்னும் 100 வருடங்களுக்கு பின்னர் பிறக்கும் குழந்தைக்கும் இவர் இசை பிடித்தமானதாக இருக்கும் என்றால் கூட அது மிகை இல்லை. இவரது திருமண வாழ்கை பற்றி சொல்ல வேண்டும் எனில் இவருக்கு சாயிரா பானு உடன் 29 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர்.இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாயிரா அறிவித்து இருக்கிறார். மிகுந்த வ*லி மற்றும் வே*தனை உடன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.ஒருவருக்கொருவர் அதிகம் ஆழமான அன்பு இருந்தாலும், பிரச்சனைகளால் ஏற்பட்ட இடைவெளியை சரி செய்ய முடியும் என தோன்றவில்லை என அவர் கூறி இருக்கிறார்.இந்த செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.