இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் அவரது பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக அவரது காதல் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இவரது முதல் இசையே இவருக்கு தேசிய விருதை வாங்கி தந்தது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாயிரா, 29 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே இது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த அறிவிப்பை இவர் அறிவித்த பின்னர் இணையம் முழுக்க இவர்கள் குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் உண்மையை விட பொய்யான செய்திகள் தான் அதிகம்.
ரஹ்மான் காதலித்து எல்லாம் திருமணம் செய்யவில்லை, எனக்கு ஒரு பொண்ணு பாருங்க என அவரது அம்மாவிடம் கூறி இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்தது தான் இந்த திருமணம்.ரஹ்மானுக்கு அப்போது 29 வயது, அப்போது ரோஜா, பம்பாய் அவர் இசையமைப்பில் பாடல்கள் பெரிய ஹிட் ஆகி இருந்த நேரம் அது. பெண்ணை தேடி காதலித்து திருமணம் செய்து கொள்ள எல்லாம் எனக்கு நேரம் இல்லை, அதனால் தான் அம்மாவிடம் அப்படி கூறினேன் என ரஹ்மானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எப்படிப்பட்ட பெண் வேண்டும் என அம்மா கேட்டபோது சிம்பிளான, எனக்கு எந்த பிரச்சனையும் கொடுக்காத ஒரு பெண் வேண்டும். அப்போது தான் நான் மியூசிக் போட முடியும் என ரஹ்மான் கூறினாராம்.
29 வருடம் தொடர்ந்த அவர்களது திருமண வாழ்க்கை, தற்போது விவாகரத்து மூலம் முடிவுக்கு வந்து இருக்கிறது.