திருமணம் செய்துகொள்ள மாட்டேன் - பிரபல நடிகை திடீர் பேட்டி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தமிழில் இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் மருத்துவர் ஆக இருந்தாலும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் முழு மூச்சாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனக்கு திருமணமே வேண்டாம் என்கிற முடிவை எடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

 இதற்கு அவர் கொடுத்துள்ள விளக்கம், நான் பார்த்த வரையில், எனக்கு தெரிந்தவர்கள் திருமணம் செய்த பிறகு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. சின்ன வயதில் இருந்தே திருமணம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மாறிவிட்டது. எனக்கு தற்போது 34 வயதாகிறது. திருமணம் வேண்டாம் என நினைக்கிறேன் என ஐஸ்வர்யா லட்சுமி கூறி இருக்கிறார். இது எல்லா ஹீரோயினும் சொல்வது தானே? தனக்கு பிடித்த ஒரு ஆளை பார்த்த பின்னர் இந்த எண்ணங்கள் மாறிவிடுவதும், இன்ஸ்ட்டாவில் மாறி மாறி புகைப்படங்களை பதிவிடுவதும் காலம் காலமாக திருமணம் வேண்டாம் என சொல்பவர்கள் செய்வது தானே?

Related Posts