Font size:
Print
ஸ்காபரோவில் உள்ள அஜின்கோர்ட் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் ஃபின்ச் அவென்யூ ஈஸ்ட் மற்றும் மெக்கோவன் சாலையில் உள்ள விட்னி கேஸில் கிரசென்ட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
கத்தி குத்து சம்பவம் நடந்ததாக கூறி ரொறொன்ரோ பொலிசார் அழைக்கப்பட்டனர். பொலிஸ் அதிகாரிகள் வந்து பார்த்தபோது காயங்களுடன் ஒருவரைக் கண்டனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவரின் 32 வயது மகன் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
சம்பவம் குறித்து பேசிய இறந்தவரின் சகோதரி தனது சகோதரருக்கு 66 வயது ஆகிறது என்றும், அவரது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறினார். இப்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மகன் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Related Posts