கனடாவை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அத்தியாவசியப் பொருட்களின் விலை காரணமாக கனடாவில் பலர் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கனடாவில் வசிக்கும் 25 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளைத் தவிர்த்து தங்கள் குழந்தைக்கு உணவளிப்பதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை சால்வேஷன் ஆர்மி என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"பல கன்னடியர்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், முக்கியமாக தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையானதை செய்வதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்" என்று சால்வேஷன் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.அதோடு இந்தக் கணக்கெடுப்புக்காக பதில் அளித்த 90% பேர் தங்களுடைய நிதி கடமைகளுக்காக போதுமான பணத்தை சேமிக்க மளிகை பொருட்கள் வாங்குவதற்கான செலவை குறைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் ஃபுட் பேங்க் என்று சொல்லப்படுகிற உணவு வங்கிகள் இருக்கும். இங்கு அத்தியாவசிய உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்கப்படும். அதேபோல கனடாவின் டெய்லி பிரட் ஃபுட்பேங்க் மற்றும் நார்த்யோர்க் ஹார்வெஸ்ட் ஃபுட்பேங்க் ஆகியவை இதுவரை இல்லாத அளவில் மக்கள் வரத்து இருப்பதாக தெரிவித்தது.

Related Posts