Font size:
Print
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரை அவரது மகனே கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
பிராம்டனில் வசித்து வந்த இவர் கடந்த 40 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடியாக இருந்துள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவரது மகன் இளங்கோ மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது.
சம்பவ தினத்தன்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் என்று அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடனடியாக பொலிஸார் அவரைக் கைது செய்து காவலியில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Related Posts