Font size:
Print
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1888 வீடுகளும், மூத்த கலைஞர்களுக்கு 108 வீடுகளும் நிர்மாணிப்பதற்கான திட்டம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாதிலேகா ஆகியோரினால் இது இடம்பெற்றது.
பேலியகொட, தெமட்டகொட, மொரட்டுவ மற்றும் மஹரகம பிரதேசங்களில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன.
கொட்டாவ பிரதேசத்தில் மூத்த கலைஞர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்று நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (P)
Related Posts