தனது காதலரை சினிமாவிற்கு மறைமுகமாக அறிமுகம் செய்த ராஷ்மிகா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் நிலையில் சென்னையில் பிரம்மாண்டமாக படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையில் பேசிய ராஷ்மிகாவிடம் பல கேள்விகளை தொகுப்பாளராக இருந்த அஞ்சனா மற்றும் மிர்ச்சி விஜய் ஆகியோர் கேட்டனர்.காதலை பற்றி பல கேள்விகளை கேட்ட நிலையில் ராஷ்மிகா அதை மழுப்பலாக பேசி சமாளித்தார் ராஷ்மிகா. உங்களுக்கு கணவராக வர போகிறவர் சினிமா துறையை சேர்ந்தவரா அல்லது வேறு துறையை சேர்ந்தவரா என கேட்டபோது, எல்லாருக்கும் தெரிந்தது தான் என கூறினார் ராஷ்மிகா.

 இதனால் அவர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதை மேடையில் மறைமுகமாக போட்டுடைத்து இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலில் இருப்பது அவ்வப்போது இன்ஸ்ட்டாவில் போடும் புகைப்படங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். இருவரும் வெளிப்படையாக சொல்ல வில்லை அவ்வளவு தான் மற்றபடி இருவரும் காதலில் இருப்பது அப்பட்டமான உண்மை என்பது சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட உண்மை.

Related Posts