இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தனது மனைவி சாய்ராவை 29 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்னர் இவர் குறித்து பலரும் தவறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சாய்ரா விவாகரத்து பிரச்சனை குறித்தும் ஏ.ஆர்.ரகுமான் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சனையாக இருந்துவிட கூடாது என்றும் எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் உலகிலேயே தலைசிறந்த மனிதர் எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம்.
விரைவில் என் உடல்நிலையை சரி செய்து விட்டு நான் சென்னை திரும்புவேன். எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் எதிர்மறையான கருத்துக்களை தான் கூறிவருகிறார்கள். ஏனெனில் தற்காலிமாக உள்ள பிரச்சனைகளுக்காக அல்லது உடல் ரீதியான கோளாறுகளுக்காக விவாகரத்து என்பது ஏற்புடையது அல்ல குறிப்பாக உடல் நிலை சரியில்லாத நேரத்தில் தானே இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும்? அதைவிடுத்து, விவாகரத்து என்பது எந்த விதத்தில் சரி என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி உள்ளனர். அதுமட்டுமில்லாமல், ரஹ்மான் மனைவியின் இந்த விளக்கத்தை கேட்கும் போது, இவர்களது பிரிவுக்கு பின்னாடி வேறு விஷயம் உள்ளது என கிசுகிசுக்கிறது தமிழ் சினிமா வட்டாரம்,.