நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் நோக்கத்தில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான கால அவகாசம் முன்பு செப்டம்பர் வரை கொடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அக்டோபர் 31 வரை நீடிக்கப்பட்டது. ஆனால் பலரும் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்காததால் டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கேஒய்சி அப்டேட் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை ரேஷன் கடைகளில் சமர்ப்பிக்கலாம். மேலும் https://tnpds.gov.in என்று ஆன்லைன் முகவரியிலும் அப்டேட் செய்யலாம்.
நாட்டில் ஏற்கனவே 5.8 கோடி பேரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது போலி ரேஷன் கார்டுகளை களையெடுக்கும் விதமாகத்தான் ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் எனவும் இகேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்காவிடில் அவர்களின் கார்டுகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Font size:
Print
Related Posts