வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் புயல் வலுப்பெற இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதே போன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
Font size:
Print
Related Posts