கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிக்கை வெளிவந்த நிலையில், பெரும் சர்ச்சை உருவானது. இணையம் முழுக்க நயன்தாரா தனுஷ் சண்டை பற்றிய பேச்சு தான். தனது திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த, படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் NOC தரவில்லை என கூறி, இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில், தனுஷை கடுமையாக சாடியும் இருந்தார் நயன்தாரா.தனுஷ் அனுமதிக்க கொடுக்காத நிலையிலும், தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி இருந்தார். நயன்தாராவின் இந்த செயலுக்கு இணையம் முழுக்க எதிர்ப்புகளே கிளம்பி இருந்தன.
காரணம் வியாபார நோக்கில் தான் நடித்த படங்களின் காட்சியை பயன்படுத்த நயன்தாரா நினைக்கலாம் ஆனால் அதே வியாபார நோக்கில் தனுஷ் தன்னுடைய தயாரிப்பில் உருவான படத்தின் காட்சிகளை நயன்தாரா பயன்படுத்த காசு கேட்பதில் என்ன தவறு? என பலரும் தனுஷிற்கு ஆதரவாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில், தனது தயாரிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை, தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தனுஷ். சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தனுஷ் தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.