தமிழில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் டிவியின் மூலம் பிரபலமான ஸ்ருதிகா, இந்தி பிக் பாஸில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். உண்மையை சொல்லப்போனால் தமிழ் பிக்பாசை விட ஹிந்தி பிக்பாஸ் தான் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நம்ம தமிழ் பொண்ணு உள்ளே இருப்பதால் தான். கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 18 இந்தியில், ஸ்ருதிகா அர்ஜுன் போட்டியாளராக களமிறங்கினார்.சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் 18ல் தமிழ் குறித்து பல விஷயங்களையும் ஸ்ருதிகா பகிர்ந்தார். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. வெளிப்படையாக சொல்லப்போனால் பிக்பாஸிற்கே தமிழ் சொல்லிக்கொடுத்து கொண்டிருக்கிறார் ஸ்ருதிகா. இவருக்கு வெற்றி வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இவரே டைட்டில் வின்னராக இருந்தால் கூட ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. ஹிந்தி மக்களுக்கும் ஸ்ருத்திகாவை மிகவும் பிடித்து போய்விட்டது.
இந்தநிலையில், பிக் பாஸ் 18 துவங்கியதில் இருந்து, அந்த வீட்டிற்குள் ஸ்ருதிகாவின் நெருங்கிய தோழியாக இருப்பவர் நடிகை Chum Darang என்பவர் தானாம். இருவரும் நெருக்கமான தோழிகளாக வீட்டிற்குள் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.அப்போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணம் மனமுடைந்து கதறி அழுதுள்ளார் ஸ்ருதிகா. மேலும், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிகா கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ருதிகாவை எப்போதும் சிரித்தவாறே பார்த்த ஹிந்தி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் சோகத்தில் வாடும் ஸ்ருதிகாவின் முகம் வாட்டத்தை கொடுத்துள்ளதை சோசியல் மீடியாவில் பார்க்கமுடிகிறது.