தமிழ் சினிமாவில் பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி. அதை தொடர்ந்து, இவர் மரியான் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். முதல் படத்திலே இவர் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்துவிட்டதால் இவரை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது. பிறகு, மலையாள படங்களான சார்லி, பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் மூலம் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பதித்தார். சமீபத்தில், இவர் நடிப்பில் தங்கலான் வெளியாகி வெற்றி நடை போட்டது. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனையில் நயன்தாராவுக்கு ஆதரவு கொடுத்தது குறித்து பார்வதி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெறுவதற்கு தனி ஆளாக நயன்தாரா எவ்வளவு கஷ்டத்தை கடந்து இங்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஒரு அறிக்கை வெளியிட்டால் அதில் கண்டிப்பாக உண்மைத் தன்மை இருக்கும் என உணர்ந்தேன். எனக்கு இது போன்ற ஒரு நிலை வந்தபோது எனக்கு துணையாக யாரும் வரவில்லை. அதன் வலி புரிந்ததால் தான் நான் அவருக்கு ஆதரவு அளித்தேன் என்று கூறியுள்ளார்.
பார்வதி இப்படி கண்மூடித்தனமாக ஆதரவு அளிப்பதை என்னவென்று சொல்வது? பணம்சம்பாதிக்கும் நோக்கோடு நயன்தாரா தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகளை இலவசமாக கேட்கும்போது, அதற்கு தனுஷ் முடியாது என்று கூறி, வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அந்த காட்சியை தயாரிக்க நான் செலவு செய்துள்ளேன் என்கிறார், தனுஷ் சொல்வதில் என்ன தவறு உள்ளது? தனுஷிடம் இருந்து நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை வாங்கி நயன்தாரா விற்க தானே போகிறார்? நயன்தாரா காசிற்கு ஆசைப்படலாம் தனுஷ் ஆசைப்படக்கூடாதா? உண்மை என்னவென்றால் இது புரிந்து கொண்டு நயன்தாரா ரசிகர்களே நீங்க காசு கேட்பது தவறு எனும் போது, சினிமாவிலே உள்ள நடிகை பார்வதி கண்மூடித்தனமாக நயன்தாரவுக்கு ஆதரவு அளிப்பது ஏனோ?