டொராண்டோவில் ரோஜர்ஸ் சென்டரில் நடந்த வேர்ல்ட் சீரிஸ் 7-வது ஆட்டத்தில் டொராண்டோ ப்ளூ ஜேஸ் அணி லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸிடம் தோல்வியடைந்தது. ஆட்டம் கூடுதல் இன்னிங்ஸ் வரை நீண்டு நள்ளிரவு 12:20 மணிக்கு முடிந்தது. இதற்கு போக்குவரத்து சேவையை நீட்டிக்காததால், நகராட்சி மற்றும் மெட்ரோலிங்ஸ் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டன.
இது தோல்வியில் உப்பு தடவுவதுபோல் உள்ளது என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். விமான நிலைய ஹோட்டல்களுக்கு UP எக்ஸ்பிரஸ் ரயில் 1 மணிக்கு புறப்பட்டதால், பலர் தவறவிட்டனர்.
கவுன்சிலர் பிராட் பிராட்போர்டு “முட்டாள்தனமான முடிவு” எனக் கூறி, “எதிர்காலத்தில் மக்களை தேவையான இடத்திற்கு, தேவையான நேரத்தில் கொண்டு செல்வோம்” என உறுதியளித்தார். கவுன்சிலர் ஜோஷ் மாட்லோ “மோசமான செய்தி; ஆயிரக்கணக்கானோரை தவிக்க விட்டது” என TTC வாரியக் கூட்டத்தில் எழுப்புவேன் என்றார்.
ஊழியர் கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்து நீட்டிக்க முடியவில்லை TTC தலைமை நிர்வாகி மாண்டீப் லாலி விளக்கம் அளித்தார்.
