திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்களை குறி வைத்து அரேங்கேறும் மோசடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு முழுவதும் இணையதள வளர்ச்சியால் பண மோ*சடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் திருமணத்திற்காக வரன் தேடுபவர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் மோ*சடி செய்துள்ளார். இவர் பல்வேறு போலியான மேட்ரிமோனி தளங்களை உருவாக்கி, அதில் அழகான பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, திருமண வரன் தொடர்பான விளம்பரங்களையும் செய்துள்ளார். வாடிக்கையாளர்கள் அவர்களின் பேச்சில் மயங்கி, பல லட்சம் ரூபாயை அனுப்பி உள்ளனர். இவர் மொத்தம் 500 பேரிடம் மோசடி செய்துள்ளார். காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, ஹரிஷ் பரத்வாஜ் செய்த மோசடி தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக அவரது வங்கி கணக்கையும் முடக்கி வைத்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related Posts