ஐந்து ரூபாய் பலூனால் பரிதாபமாக பறிபோன உயிர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கர்நாடக மாநிலத்தில் ஜோகனகொப்பா கிராமத்தில் நாராயண பெல்காம்வர் என்பவருக்கு நவீன் நாராயணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 13 வயது ஆகிறது. நவீன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நவீன் வீட்டில் இருந்த பலூனை ஊதி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பலூன் திடீரென வெடித்து சிதறியது. மேலும் உடைந்த பலூன் நவீனின் சுவாச பாதையில் சிக்கியது. இதனால் மூச்சு விட முடியாமல் நவீன் சிரமப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் பரிதாபமாக உ*யிரிழந்தான்.

Related Posts