Font size:
Print
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை புதன்கிழமை (04) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் அசோக ரன்வல தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாக்கெடுப்பு மாலை 5. மணிக்கு இடம்பெறும். வாக்கெடுப்பு முடிவடைந்ததும் மாலை 5.30 மணிக்கு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் அனர்த்த நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரவு 9.30 மணிவரை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (P)
Related Posts