திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் மூன்று சட்டமூலங்களை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்புடைய அனைத்து குற்றங்களையும் திறம்பட தடுப்பது ஆகிய மூன்று சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை இருப்பதாக அவர் கூறினார்.
திவால் சட்டம் மற்றும் தணிக்கைச் சட்டம் ஆகியவை கடன் வழங்கியோரின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு கடனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் சீரான தன்மையையும் புதுப்பிப்பையும் ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார். (P)